டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு

டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு

டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு
Published on

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல்லை அடுத்த மோகனூரைச் சேர்ந்த சந்திரசேகரன் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்து வருகிறார். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி கடந்தாண்டு அக்டோபர் 24ம் தேதி நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த குழுமத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க மும்பையில் அந்த குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரசேகரன் திருச்சி ஆர்.இ.சி. பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவராவார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com