கோகுலம் நிதி நிறுவனம் 1,100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகளில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் 36 இடங்களிலும், கோவையில் ஐந்து இடங்களிலும், கேரளாவில் 29 இடங்களிலும் சோதனை நடந்தது.
நான்கு நாள் சோதனைகளின் முடிவில், கோகுலம் நிதி நிறுவனம் சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு மட்டுமல்லாமல், ஹவாலா மோசடி நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் தொடங்கப்பட்ட கோகுலம் நிதிநிறுவனம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.