ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா குழுமம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா குழுமம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா குழுமம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 இந்தியாவில் முதன்முறையாக விமான சேவையை டாடா குழுமமே தொடங்கியது. பின்னர் 1953 ஆம் ஆண்டு இந்த விமான சேவையை மத்திய அரசு கையகப்படுத்தியது. அதன் பின்னர் இந்த நிறுவனத்தை தேசியமயமாக்கி ஏர் இந்திய நிறுவனமாக மத்திய அரசு மாற்றியது. 
 தற்போது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் டாடா குழுமத்தின் சேர்மன் சந்திரசேகரன் மத்திய அரசு வசம் உள்ள 51 சதவிகிதம் ஏர் இந்திய நிறுவனப்பங்குகளை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான  பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் ஆகையால், தற்போதைய நிலவரப்படி 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி இருப்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து இருந்தார். ஏற்கெனவே ரூ.24 ஆயிரம் கோடி அளவிலான பங்குகளை ஏர் இந்திய நிறுவனத்தில் கொண்டுள்ள டாடா குழுமம் மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
கடந்த 2013 ம் ஆண்டு அபோது டாடா குழுமத்தின் த்லைவராக இருந்த ரத்தன் டாடா ‘ ஏர் இந்தியா நிறுவனத்தை  திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். 
இந்த நிறுவனத்தை கைப்பற்றி சிங்கப்பூர் ஏர்லைனஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான சேவையாற்ற டாடா குழுமம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com