டாடா குழுமம் அறிமுகப்படுத்தும் 'டாடா நியூ' ஆன்லைன் ஷாப்பிங் செயலி

டாடா குழுமம் அறிமுகப்படுத்தும் 'டாடா நியூ' ஆன்லைன் ஷாப்பிங் செயலி

டாடா குழுமம் அறிமுகப்படுத்தும் 'டாடா நியூ' ஆன்லைன் ஷாப்பிங் செயலி
Published on

அமேசான், பேடிஎம், ஜியோ உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக டாடா நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

சால்ட் முதல் சாப்ட்வேர் மற்றும் விமான சேவை வரையான டாடா குழுமத்தின் அடுத்த குறி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை. டாடா நியூ என்ற செயலியை அந்நிறுவனம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. தனது குழும நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் ஏசியா விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது, தாஜ் குழும விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்வது, பிக்பாஸ்கெட்டில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற சேவைகளை டாடா நியூ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த செயலி மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நியூ காயின்கள் என்ற பெயரில் வெகுமதி வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை அடக்கிய செயலிகளை வைத்துள்ள நிலையில், டாடா நிறுவனமும் மின்னணு பரிவர்த்தனையில் புதிய பரிமாணத்தில் களமிறங்க உள்ளது.

இதையும் படிக்க: அம்பானியை பின்னுக்குத்தள்ளி டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த அதானி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com