தமிழகத்தில் ரூ.5000 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

தமிழகத்தில் ரூ.5000 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
தமிழகத்தில் ரூ.5000 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

தமிழகத்தில் ரூ.5000 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் 6 நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்ததெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறது என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் Airbag inflator தாயாரிக்கும் டைசெல் கார்ப்பரேஷன்(Daicel Corporation) நிறுவனம் காஞ்சிபுரத்தில் 900 கோடி ரூபாயை 3 கட்டமாக முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 515 கோடி முதலீட்டில் ஐடிசி நிறுவனம் கோவை தேக்கம்பட்டியில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 330 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாகனம் - லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீட்டை கிருஷ்ணகிரியில் 2 கட்டமாக மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் 2925 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.600 கோடி முதலீட்டில் கார்பன் தயாரிக்கும் ஃப்லிப்ஸ் கார்பன் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. 2020க்குள் தேர்வாய் கண்டிகையில் இந்நிறுவனம் உற்பத்தியை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com