மளிகைப்பொருட்கள் விநியோகத்தில் கவனம் செலுத்தும் ஸ்விக்கி - வெளியேறிய ஜொமோடோ

மளிகைப்பொருட்கள் விநியோகத்தில் கவனம் செலுத்தும் ஸ்விக்கி - வெளியேறிய ஜொமோடோ

மளிகைப்பொருட்கள் விநியோகத்தில் கவனம் செலுத்தும் ஸ்விக்கி - வெளியேறிய ஜொமோடோ
Published on

ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த ஆண்டில் மளிகைப்பொருட்கள் விநியோகப்பிரிவில் நுழைந்த நிலையில், தற்போது ஸ்விக்கி அந்த துறையின் தனி நிர்வாகத்தை அமைத்துள்ளது, ஜொமோடோ தற்போது இந்த துறையிலிருந்து விலகியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்விக்கி, தனது தாய் நிறுவனமான பன்ட்ல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குள் சுபர் டெய்லி(supr daily) எனும் தினசரி மளிகை விநியோக சேவையை தனி வணிக பிரிவாக நிறுவ முடிவு செய்துள்ளது, ஸ்விக்கி 2019 இல் சுபர் டெய்லியை வாங்கியது.

ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது தலைமை செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அதன் முழு திறனை வெளிப்படுத்தவும் அனுமதிக்கும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுபர் டெய்லி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்விக்கியின் இணை நிறுவனர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பானி கிஷனால் வழிநடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஜொமோடோ மளிகைப் பொருட்கள் விநியோகப் பிரிவில் நுழைந்தது. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது இந்த பிரிவில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com