இந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்

இந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்
இந்தியாவின் 130 புதிய நகரங்களில் காலூன்ற ‘சுவிக்கி’ திட்டம்

இந்தியாவில் புதிதாக 130 புதிய நகரங்களில் தங்கள் கிளைகளை தொடங்க உணவு டெலிவரி நிறுவனமான சுவிக்கி திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் உணவு நிறுவனமான சுவிக்கி கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது. மக்களின் வரவேற்பை அடுத்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் சுமார் 500 நகரங்களில் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி 75 பல்கலைக்கழங்களிலும் இதன் கிளைகள் உள்ளன. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 200 பல்கலைக்கழகங்களில் தங்களின் கிளைகளை தொடங்க சுவிக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களை அங்கு பணியில் சேர்த்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது கிளைகள் உள்ள 500 நகரங்களுடன் கூடுதலாக 130 நகரங்களில் புதிய கிளைகளை திறக்கவும் சுவிக்கி நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. குறிப்பாக கார்நாடகாவின் பாகல்கோட், ஆந்திரப் பிரதேசத்தில் இந்துபூர், தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகாசி, மகாராஷ்டிராவில் சவாந்வாடி மற்றும் சங்கம்நர், அசாமில் ஜாரத் ஆகிய நகரங்களில் புதிய கிளைகள் தொடங்கப்படவுள்ளன. 

2019 ஏப்ரல் நிலவரப்படி, இந்தியாவில் 1.4 லட்சம் உணவங்களுடன் சுவிக்கி நிறுவனம் இணைப்பில் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் உணவங்கள் சுவிக்கியுடன் இணைந்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com