“ஊரடங்கிற்கு முன் ஸ்டூடண்ட்ஸ், இப்போ பிசினஸ் லேடீஸ்” - கலக்கும் கோவை மாணவிகள்!

“ஊரடங்கிற்கு முன் ஸ்டூடண்ட்ஸ், இப்போ பிசினஸ் லேடீஸ்” - கலக்கும் கோவை மாணவிகள்!
“ஊரடங்கிற்கு முன் ஸ்டூடண்ட்ஸ், இப்போ பிசினஸ் லேடீஸ்” - கலக்கும் கோவை மாணவிகள்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவிகள் இருவர் கொரோனா காலத்தை பயனுள்ள வகையில் மாற்றி தொழில்முனைவோராய் மாறி தற்போது 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து அசத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிக் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலை மாணவர்களின் தனிப்பட்ட படைப்புத்திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு உறுதுணையாக இருந்தது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் தொழில் முனைவோர்களாகவும் மாறினர். அந்த வரிசையில் தற்போது கோவைச் சேர்ந்த இரு மாணவிகள் இணைந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த மாணவிகள் திவ்யா, தருணிகா. தனியார் கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி படித்துவரும் இவர்களுக்கு, படித்து முடித்த உடன் சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்தக் கனவை சாத்தியப்படுத்த இந்த கொரோனா கால விடுமுறையை கனகச்சிதமாக பயன்படுத்தி உள்ளனர்.

இதற்காக பெற்றோரிடம் இருந்து சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அவர்கள், திருப்பூரில் இருந்து ஆடைகளை வாங்கி, அதில் தங்களின் உத்திகளை புகுத்தி, ஆடைகளை வடிவமைத்து ஆன்லைனில் விற்பனை செய்துள்ளனர். 25 விதமான ஆடைகளை வடிவமைத்த இந்த மாணவிகள் அதனை அனைவருக்கும் தெரியப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளனர். 

இவர்களது ஆடை வடிவமைப்புக்கு உள்ளூர் மட்டுமல்லாது மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் வீட்டில் இருந்து இரண்டு இயந்திரங்களை பயன்படுத்தி ஆடைகளை உற்பத்தி செய்து வந்த நிலையில், மக்களின் தொடர் வரவேற்பு காரணமாக, தனியார் நிறுவனத்திடம் இருந்து உதவிபெற்று தற்போது தங்களது தொழிலை விரிவுப்படுத்த உள்ளனர். கடந்த ஆறு மாதத்தில் இவர்கள் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com