வணிகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 54,627 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 53 புள்ளிகள் அதிகரித்து 16,311 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஹெச்.டி.எஃப்.சி, கோட்டக் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சி கண்டு வருவதும், தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருவதுமே இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாக காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19 காசுகள் சரிந்து 74.45 ரூபாயானது.