எஸ்.பி. ஐ வங்கியின் அதிரடி ஆஃபர் : கிரெடிட் கார்டு வாங்குபர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் பரிசு

எஸ்.பி. ஐ வங்கியின் அதிரடி ஆஃபர் : கிரெடிட் கார்டு வாங்குபர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் பரிசு

எஸ்.பி. ஐ வங்கியின் அதிரடி ஆஃபர் : கிரெடிட் கார்டு வாங்குபர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் பரிசு
Published on

இந்திய நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘Pulse’ என்ற புதிய கிரெடிட் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெல்கம் கிஃப்டாக வழங்குகிறது. இந்த சலுகை ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி சேர்க்கும் வகையில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸை உறுதி செய்யும் வகையிலான பல்ஸ் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மருத்துவம் சார்ந்த பயன்களை பெற பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்டை கொண்டு ஹாலிடே கவரேஜ், எரிபொருள் நிரப்பும் போது விலக்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பிற சலுகைகளையும் இந்த கார்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் மற்றும் அதற்கும் மேல் இந்த கார்டை கொண்டு பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு சந்தாவில் முழு  விலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டின் ஆண்டு சந்தா 1499 ரூபாய். அதை செலுத்தி கார்டை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 4999 ரூபாய் மதிப்புள்ள Noise ColorFit Pulse ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com