கொரோனா சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம்- ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்

கொரோனா சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம்- ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்
கொரோனா சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம்- ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி தனது பணியாளர்களுக்கு கொரோனா பேரிடர் காலத்தையொட்டி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. வங்கிப் பணியாளர்கள் தினசரி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், பல வங்கிகள் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்கின்றன.

பணியாளர்களின் குடும்பம், பெற்றோர் மற்றும் துணையின் பெற்றோர் முதலானோர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சுமார் 2.50 லட்ச ரூபாய் தொகையை (ஒரு நபருக்கு) பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. ஒருவேளை வீட்டுத் தனிமை இருந்தால் ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

ஒருவேளை வங்கிப் பணியாளர்கள் கொரோனா காரணமாக இறந்துவிட்டால், நான்கு ஆண்டு கால சம்பளத்தை வழங்க இருப்பதாக வங்கி அறிவித்திருக்கிறது. அதேபோல பணியாளர்களுக்கு தேவைப்பட்டால் வட்டி இல்லாத முன் தொகையும் வழங்க இருக்கிறது. அதிகபட்சம் ஆறு மாத சம்பளத்தை வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும் என வங்கி தெரிவித்திருக்கிறது.

வங்கியில் உள்ள வழக்கமான சலுகைகளை தவிர கொரோனாவுக்கு என பிரத்யேகமாக இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய வங்கிகள் சங்கத்தின்படி, இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட வங்கியாளர்கள் கொரோனா காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்கள். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் வங்கி பணியாளர்கள் ஒருவர் மரணம் அடைய நேர்ந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க இருப்பதாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் அறிவித்திருக்கின்றன.

முன்னுரிமை அடிப்படையில் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சம் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com