"பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை!

"பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை!
"பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை!

தமிழக பட்ஜெட்டில் பின்னலாடை துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சிறு குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பட்ஜெட்டில் மின்கட்டணம் உயர்வை ஈடு செய்ய அதில் சலுகை அறிவிக்க வேண்டும் மேலும் , சொத்து வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சிறு குறு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த செந்தில் வேல்.

வெளிநாட்டு ஏற்றுமதி ஸ்தம்பித்து போய் உள்ள இந்த நிலையில் மத்திய அரசு பெரும் தொழில் அமைப்புகளுக்கு சலுகைகள் அறிவிக்கின்றனர் . ஆனால் சிறு குறு பின்னலாடை தொழிற்துறையினருக்கு தமிழக அரசு மூலப்பொருட்கள் வரியில் சலுகை அறிவிக்க வேண்டும் என்றும் வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை உள்ள நிலையில் உள்ளூர் தொழிலார்களை ஊக்குவிக்க தொழிலாளர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் , காட்டன் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு மானியம் அறிவிக்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள தொழிற்பேட்டைகளை சீரமைப்பு செய்ய வேண்டும் , இயங்காத நிறுவனங்களை வெளியேற்றி விட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார் செந்தில் வேல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com