கூட்டுறவுத் துறைக்கென புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என அத்துறைக்கான மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாடெங்கும் உள்ள ஆரம்ப நிலை வேளாண் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சமாக உயர்த்தப்படும். கூட்டுறவுத் துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில் மத்திய அரசின் கீழ் கூட்டுறவுத் துறை அமைச்சகத்தை உருவாக்கியது ஏன் என பலரும் வியப்படைந்துள்ளனர், இதற்கு சட்ட ரீதியான பதில் உள்ளது. ஆனால், அதைக் கூறி சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. எனினும் கூட்டுறவுத் துறையில் மாநில அரசுகளுடன் நல்லுறவு நிலவுகிறது. இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக்க கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியும் அவசியம்” என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவுத் துறையானது, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.