8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறுந்தொழில் துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்..!

8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறுந்தொழில் துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்..!
8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறுந்தொழில் துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்..!
Published on

இந்தியாவில் விவசாயம், நெசவுக்கு அடுத்தபடியாக அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை தரும் தொழிற் துறைகளில் ஒன்றாக சிறு, குறு தொழில்கள் துறை விளங்குகிறது. இத்துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்திய தொழில்துறையின் முதுகெலும்பு என அழைக்கப்படுவது சிறு, குறுந் தொழில்கள் துறை. நாட்டின் பொருளாதாரத்தில் 8 சதவிகித பங்களிப்பை வழங்கக் கூடிய இத்துறை 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. தற்போது பல முனைகளில் இருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இத்துறை அரசின் சலுகைகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறது.

கடனை திரும்பக் கட்டுவதற்கான அவகாசத்தை அதிகரிப்பது, 2 கோடி ரூபாய் வரையிலான கடனை பிணையில்லாமல் வழங்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்குவது என்பது போன்ற முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் முக்கி‌ய கோரிக்கையாக உள்ளது.

தொழிலாளர் தொடர்பான புதிய சட்ட விதிகள் சிறுதொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இத்துறையினர் கூறுகின்றனர். சிறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் சர்ஃபாசி சட்ட விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் இத்தரப்பினர் கூறுகின்றனர்.

சிஎன்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய இயந்திரங்‌கள் வாங்கும் போது சலுகைகள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு ஊக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் சிறுதொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். சிறுகுறுந் தொழில் தொடர்பான தேசிய கொள்கையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இத்துறையினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com