\
தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதிக்கு கட்டணம் நிர்ணயம்

தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதிக்கு கட்டணம் நிர்ணயம்

தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதிக்கு கட்டணம் நிர்ணயம்
Published on

தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளும், ஒற்றைச் சாளர முறையில் பெறுவதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “அரசு சார்ந்த 40-க்கும் மேற்பட்ட துறைகள், அமைப்புகளின் சேவைகளை ஒரே இடத்தில், ஒருமுறை செலுத்தும் கட்டணம் மூலம் பெறமுடியும். நிறுவனங்களின் முதலீடுக்கு ஏற்ப கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் வரை தொழில் விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

ரூ.10 கோடியில் இருந்து ரூ. 50 கோடி வரை விரிவாக்கம் செய்தால் இரண்டரை லட்ச ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை தொழிலை விரிவாக்கம் செய்தால் 5 லட்ச ரூபாயும் 100 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை விரிவாக்கம் செய்தால் 10 லட்ச ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். 300 கோடி முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை 15 லட்ச ரூபாயும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விரிவாக்கம் செய்தால் 20 லட்ச ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com