
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் முதல்முறையாக 54 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 466 புள்ளிகள் உயர்ந்து 54,289 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 125 புள்ளிகள் அதிகரித்து, 16,255 புள்ளிகளில் வணிகமாகியது.
இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாகவதாக கூறப்படுகிறது.