ஒரே நாளில் 788 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ் - ரூ.3.36 லட்சம் கோடி இழப்பு

ஒரே நாளில் 788 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ் - ரூ.3.36 லட்சம் கோடி இழப்பு
ஒரே நாளில் 788 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ் - ரூ.3.36 லட்சம் கோடி இழப்பு

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு வலுத்து வருவது இந்திய பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 788 புள்ளிகள் குறைந்து 40 ஆயிரத்து 676 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 993 புள்ளியில் முடிந்தது. கடந்த 6 மாதங்களில் ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் குறைந்தது இதுவே முதல் முறையாகும். பங்குச் சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.

பதற்ற நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கம், பத்திரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகளில் போட்டுவருவதே சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா தவிர பிற ஆசிய, ஐரோப்பிய சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. வளைகுடாவில் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் குறைந்து 71 ரூபாய் 93 பைசாவாக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 1.37% அதிகரித்து 69.64 டாலராக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com