\
இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் வர்த்தகம்
Published on: 

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. இன்று காலை 10.15 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்ந்து 59,521 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 173 புள்ளிகள் அதிகரித்து 17,720 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எஃப்.சி வங்கி, கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து வணிகமாவதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com