\
இந்தியப் பங்குச் சந்தைகள் 2ஆவது நாளாக சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் 2ஆவது நாளாக சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகள் 2ஆவது நாளாக சரிவு
Published on: 

இந்தியப் பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக இன்றும் இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.

காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்து 52,223 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 100 புள்ளிகள் குறைந்து 15,651 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் இறக்கத்தின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளும் குறைந்து வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com