100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் : நிஃப்டியும் கடும் சரிவு
பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்போவதாக கூறிய சில நிமிடங்களில், இந்திய பங்கு சந்தை இன்று சரிவை சந்தித்தது.
இந்திய மற்றும் மும்பை பங்கு சந்தை இன்று காலை ஏற்றத்துடன் ஆரம்பித்தது. ஆனால், பிரதமர் மோடி மதியம் முக்கிய தகவல் ஒன்றை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க உள்ளதாக, காலை ட்விட்டரில் பதிவிட்டார். அதன்பின்னர் இந்திய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை இரண்டு வீழ்ச்சியை சந்தித்தது. இன்றைய தின முடிவில் மும்பை பங்கு சந்தை குறீயிடான சென்செக்ஸ் 100.53 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,132.88 புள்ளிகளில் முடிவடைந்தது.
இதேபோன்று இந்திய பங்கு சந்தை மதிப்பான நிஃப்டி இன்றைய தின முடிவில் 38.20 புள்ளிகள் சரிந்து 11,445.05 புள்ளிகளில் முடிவடைந்தது. இன்றைய பங்குசந்தை வீழ்ச்சி சென்செக்ஸில் 0.26% மற்றும் நிஃப்டியில் 0.33% ஆகும். சென்செக்ஸ் வீழ்ச்சியில் தேசிய அனல் மின் நிலையம் அதிக பட்ச வீழ்ச்சியாக 22.5% சரிவடைந்தது. அதைத்தொடர்ந்து டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ நிறுவனம், பாரதி ஏர்டெல், பவர்கிரிட், ஹெச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் 1.85% வீழ்ச்சியடைந்தன.
அதேசமயம் எஸ் பேங்கின் (வங்கி) பங்கு அதிக பட்ச முன்னேற்றமாக 5.62% உயர்ந்தது. மேலும், இண்டஸ்ஹிண்ட், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல் டெக், ஒன்.ஜி.சி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபேஸிஸ் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் 5.27% வரை உயர்ந்தது.