இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது !
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 40 ஆயிரத்தை தொட்டது.
நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டுகளுக்கான வரி, நீண்ட நாள் முதலீடுகளுக்கான வரி மற்றும் பங்கு வர்த்தக வரி உள்ளிட்டவைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று கணிசமாக அதிரித்திருந்த நிலையில், இன்றும் உயர்வு தொடர்கிறது.
காலை 10.30 மணியளவில், மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 972 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 828 புள்ளிகளில் வணிகமாகியது. இதற்கிடையில், அந்நிய செலாவணி வர்த்தகத் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் குறைந்து 70 ரூபாய் 95 காசுகளானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 88 செண்ட் குறைந்து ஒரு பீப்பாய் 61.05 டாலரானது.