வரலாறு காண வீழ்ச்சியில் இந்திய பங்கு சந்தைகள்! தங்கம் விலையிலும் சரிவு - இன்றைய நிலவரம் என்ன?
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2 ஆவது முறையாக பொறுப்பேற்றார். அமெரிக்க அதிபராக என்று டிரம்ப் பதவியேற்றாரோ அன்று தொடங்கி பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முக்கிய பாதிப்படைந்து வருவது பொருளாதாரம்.
சமீபத்தில், அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்துள்ள அமெரிக்கா. இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் இதற்கான பதில் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
MAKE AMERICA GREAT AGAIN என்று கூறிய அமெரிக்க அதிபரின் கூற்று தற்போதையை சூழலில் பொய்யாகியிருக்கிறது என்று கூறம் அளவிற்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது அமெரிக்க பங்கு சந்தை. வர்த்தக்கப்போர் தொடங்கியவிட்டதா என்று கூறும் அளவிற்கு, அமெரிக்க பங்கு சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை உலக அளவிலான பங்கு சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன .
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தநிலையில், அதன் தாக்கதால் ஆசியப் பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
இந்தநிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, (7.4.2025) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 3100 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகி வருகின்றது. அதே போல் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 1080 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகி வருகின்றது.
இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்புதான் என்றும், இதனால், உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால், விலைவாசி அதிகரித்து வர்த்தகப்போரை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மற்றொரு புறம், தங்கத்தின் விலையும் தொடர்ந்து சமீக நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்.7) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.25 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,280 மற்றும் ஒரு கிராம் ரூ.8,285 என சந்தையில் விற்பனை ஆகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை.