இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு
Published on


மும்பை பங்குச் சந்தையி‌ல் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத பெரும் வீழ்ச்சியாக, சென்செக்ஸ் 1448 புள்ளிகள் சரிவு கண்டது. இதனால் ஒரே நாளில்‌ முதலீட்டாளர்களுக்கு ரூ. 5,45, 000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் 5 நாள்‌ சரிவால் மொத்தம் 12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆயிரத்து 624 புள்ளிகள் வீழ்ச்சி கண்டதே, சென்செக்ஸ் சந்‌தித்த பெரும் சரிவாக இருந்தது. சென்செக்ஸ் 3 புள்ளி 64 சதவிகித சரிவு கண்டு 38,297 இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 431 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11,201 இல் முடிந்தது.‌ கொரோனா வைரஸ், நியூசிலாந்து, நைஜீரியா, அஜர்பைஜான், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பரவி மொத்தம் 57 நாடுக‌ளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் பங்குகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக, சர்வதேச சந்தைகளில் நிலவும் தொடர் வீழ்ச்‌சி, இந்திய சந்தைகளையும் பாதித்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் 5 வர்த்தக நாட்களிலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கண்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களிளுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய அ‌ந்நியச் செலாவணி வணிகத்தில் 60 காசு சரிவு கண்டது.

நேற்றைய வர்த்தக முடிவில் ஒரு டாலர் 71 ரூபாய் 61 காசாக இருந்த நிலையில், இன்றைய வணிக நிறைவின்போது ரூபாய் மதிப்பு 72 ரூபாய் 21 காசாக வீழ்ச்சி கண்டது. அந்நியச் செலாவ‌ணி வணிகத்தில் அமெரிக்க டா‌லர்‌கள் அதிகளவு வா‌ங்கப்பட்டதுடன் இந்திய ரூபாயை முதலீட்டாளர்கள் அதிகமாக விற்பனை செய்ததும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com