இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன. முற்பகல் 11.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 319 புள்ளிகள் உயர்ந்து 53, 223 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 15,937 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஹெச்.சி.எல்.டெக், டெக் மஹிந்தரா, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எஃப்.சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனம் முதல் காலாண்டில் 23 சதவிகிதம் நிகர லாபம் ஈட்டியிருப்பது, ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது, சொமோட்டோ நிறுவன பொது பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்கள் சுமார் இருமடங்கு விண்ணப்பித்திருப்பது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.