ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனாவின் தாக்கம்: சர்வதேச பங்குச் சந்தைகளில் பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனாவின் தாக்கம்: சர்வதேச பங்குச் சந்தைகளில் பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனாவின் தாக்கம்: சர்வதேச பங்குச் சந்தைகளில் பாதிப்பு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், தொடர்ந்து பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் வர்த்தக முடிவில் 1,170 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையின் நிப்ஃடி 348 புள்ளிகள் சரிவு கண்டது. பணவீக்கம் உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு விலகி நின்றது ஆகியவை சரிவுக்கு காரணமாகின.

அதோடு, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதும் ஆஸ்திரியாவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதும் சர்வதேச சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து துறை பங்குகள் விலையும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் கட்டண உயர்வை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவன பங்கு மட்டும் விலை அதிகரித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com