6வது நாளாக சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

6வது நாளாக சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி
6வது நாளாக சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குச் சந்தை மதிப்பீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 6வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 141 புள்ளிகள் அல்லது 0.38% சரிவடைந்து 37,532 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை மதிப்பீடான நிஃப்டி 48 புள்ளிகள் அல்லது 0.43% குறைந்து 11,126 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 

இன்றைய சென்செக்ஸ் வர்த்தகத்தில் எஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை ஏற்றம் கண்டன. டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஐடிசி, மகேந்திரா அண்ட் மகேந்திரா மற்றும் இண்டஸ்ண்ட் ஆகியவை சரிவில் முடிந்தன. கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்த பின்னர் கிடுகிடுவென உயர்ந்த இந்திய பங்குச்சந்தை, தற்போது தொடர்ந்து 6வது நாளாக சரிவை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com