பங்கு சந்தை : சென்செக்ஸ் 214 புள்ளிகள், நிஃப்டி 59.40 புள்ளிகள் உயர்வு

பங்கு சந்தை : சென்செக்ஸ் 214 புள்ளிகள், நிஃப்டி 59.40 புள்ளிகள் உயர்வு
பங்கு சந்தை : சென்செக்ஸ் 214 புள்ளிகள், நிஃப்டி 59.40 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 214 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 59.40 புள்ளிகளும் உயர்ந்தன.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்கு சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டன. மும்பை பங்கு சந்தையான மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 214.33 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 38,434.72 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 59.40 புள்ளிகள் அல்லது 0.53% அதிகரித்து 11,371.60 புள்ளிகள் முடிவடைந்தன.

நிஃப்டி பங்குகளில் அதிகபட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ் 4.80% வளர்ச்சி கண்டது. அத்துடன் ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி வங்கி, நெஸ்ட்லி, சன் பார்மா, எஸ்.பி.ஐ, கிராசிம், இஜெர் மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் கம்பெனி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி ஆகியவையும் அதிகரித்தன.

அதேசமயம் பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல், பீபிசிஐ, விப்ரோ ஆகியவை சரிவை சந்தித்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com