கொரோனா எதிரொலி? : இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 5 லட்சம் கோடி சரிவு

கொரோனா எதிரொலி? : இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 5 லட்சம் கோடி சரிவு

கொரோனா எதிரொலி? : இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 5 லட்சம் கோடி சரிவு
Published on

இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு 5 லட்சம் கோடி சரிந்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகள் 6-ஆவது நாளாக கடும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளதால் முதலீட்டாளார்களின் பங்கு மதிப்பு ஐந்து நிமிடங்களில் 5 லட்சம் கோடி குறைந்துள்ளது. முற்பகல் 11 மணி வாக்கில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 89 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 661 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11 ஆயிரத்து 302 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின்றன. சீனாவில் பெரியளவில் தாக்குதல் ஏற்படுத்திய கொரோனா வைரஸ், உலக நாடுகளிலும் பரவி வருவதால் பொருளாதார மந்தநிலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

6ஆவது நாளாக பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை குறைந்துள்ளது. இதற்கிடையில், அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 33 காசுகள் சரிவு கண்டு 71 ரூபாய் 94 காசுகளானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com