3 நாட்கள் ஏற்றத்துக்குப் பின் சரிந்தது இந்திய பங்குச் சந்தை
இரண்டாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வந்தன. இந்நிலையில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 74 புள்ளிகள் அல்லது 0.20% சரிவடைந்து 37,328.01 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி 37 புள்ளிகள் அல்லது 0.33% வீழ்ச்சியடைந்து 11,017 புள்ளிகளுடன் முடிந்தது.
இன்றைய தினத்தில் அதிகபட்சமாக எஸ் பேங்க் 7.11% சரிவை சந்தித்தது. அதைத்தொடர்ந்து இண்டஸ்ண்ட் வங்கி 2.36%, ஐடிசி 2.01%, ஆக்ஸிஸ் வங்கி 1.64% மற்றும் ஐசிஐசிஐ வங்கி 1.48% வீழ்ச்சியடைந்தன. மற்றொருபுறம் மாருதி சுசுகி 3.75%, டாடா மோட்டார்ஸ் 2.53%, இன்ஃபோசிஸ் 1.94%, ஹெச்.சி.எல் டெக் 1.87% மற்றும் மகேந்திரா அண்ட் மகேந்திரா 1.56% வளர்ச்சி கண்டன.