இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத் தொடக்கத்தில் இன்று இதுவரை இல்லாத புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்தில் 218 புள்ளிகள் அதிகரித்து 41,108 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் வர்த்தகத் தொடக்கத்தில் 51 புள்ளிகள் உயர்ந்து 12,125 என்ற இதுவரை இல்லாத அளவை எட்டியது. சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் சந்தையில் அதிகரித்திருப்பதுமே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

