கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு
கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 35% அதிகரித்து $ 6.1 பில்லியன் ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய இதே காலத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது.

டிசம்பர் 2021-ல் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 720.51 அமெரிக்க டாலராக இருந்தது. 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில், இது 28.01% அதிகமாகும்.

இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5%), சீனா (15.3%), ஜப்பான் (6.2%) ஆகியவை உள்ளன. இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. 

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி கடந்த 2017-18-ம் ஆண்டில் 7.02 பில்லியன் டாலர் என்ற மிக அதிக அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கொரோனா பரவலுக்கு இடையிலும், இந்த அதிக அளவை மிஞ்சி சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: PIB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com