1000 ரூபாய் வரை பரிவர்தனைக்கு சேவைக் கட்டணம் இல்லை: எஸ்பிஐ
ஐஎம்பிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படும் ரூபாய் 1000 வரையிலான பணப் பரிவர்தனைக்கு சேவைக் கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
ஐம்பிஎஸ் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் இணையதள வங்கி சேவை மூலமாகவோ அல்லது மொபைல் வங்கி சேவை மூலமாகவோ உடனடியாக பணப்பரிவர்தனை மேற்கொள்ள முடியும். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி, ஐஎம்பிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படும் ரூபாய் 1000 வரையிலான பணப் பரிவர்தனைக்கு சேவைக் கட்டணமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த 5 ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. சிறிய அளவிலான பரிவர்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு எஸ்பிஐ வங்கி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் ஐம்பிஎஸ் மூலம் 1000 ரூபாய்க்கு மேல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பணப் பரிவர்தனையை மேற்கொண்டால் சேவைக் கட்டணமாக 5 ரூபாயோடு, ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். அதேபோல், ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பணப் பரிவர்தனை மேற்கொள்ளும்போது ஜிஎஸ்டியோடு, சேவைக் கட்டணமாக ரூபாய் 15 வசூலிக்கப்படும்.