ரூ.11,932 கோடி வாராக்கடன்களை குறைத்து காட்டிய எஸ்பிஐ - ரிசர்வ் வங்கி தகவல்

ரூ.11,932 கோடி வாராக்கடன்களை குறைத்து காட்டிய எஸ்பிஐ - ரிசர்வ் வங்கி தகவல்
ரூ.11,932 கோடி வாராக்கடன்களை குறைத்து காட்டிய எஸ்பிஐ - ரிசர்வ் வங்கி தகவல்

2019-ஆம் நிதியாண்டிற்கான வாராக்கடனில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்து காட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2019-ஆம் நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மொத்த மற்றும் நிகர வாராக்க‌டன் 11 ஆயிரத்து 932 கோடி ரூபாயாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆய்வுபடி, பாரத ஸ்டேட் வங்கிக்கு மொத்த வாராக் கடன் 11 ஆயிரத்து 932 கோடி ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதா‌க தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், மொத்த வாராக் கடன் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் என குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளதாக ரிசர்வ் வங்கி குற்றம்சாட்டியுள்ளது. இதனால்,‌ இந்த ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிதிநிலையில் 6 ஆயிரத்து 968 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, மாறாக 86‌2 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பதாக அவ்வங்கி தெரிவித்துள்ளதாகவும் கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com