மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் - பாரத ஸ்டேட் வங்கி

மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் - பாரத ஸ்டேட் வங்கி
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் - பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு நான்கு முறை இந்த கணக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண வசூல் முறை வரும் ஜூன் 1 முதல் அமலாகிறது. 

இலவச நிலையை கடந்து பணத்தை எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கி கிளையில் பணம் எடுப்பது, ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பது என அனைத்திற்கும் பொருந்துமாம். 

அதே போல இந்த கணக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கி தெரிவித்துள்ளது. அதற்கு மேல் காசோலைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும். 

2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கி தனது பேஸிக் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள சுமார் 12 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஐஐடி - பாம்பேவின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com