வணிகம்
வட்டி குறைப்புக்கு பின் வீட்டு கடன் மீது ஆர்வம் காட்டும் மக்கள்...! எஸ்.பி.ஐ
வட்டி குறைப்புக்கு பின் வீட்டு கடன் மீது ஆர்வம் காட்டும் மக்கள்...! எஸ்.பி.ஐ
கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பிற்கு பிறகு, வீட்டு கடன் பெற விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் குறைப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து வீட்டுக் கடன் கோரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மின்னணு பணப் பரிவர்த்தனை மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.