வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டியை கடந்த 2 மாதத்தில் இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.1 சதவிகிதம் குறைத்துள்ளது. புதிதாக வீடு கட்டுவதற்காக, ரூபாய் 75 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தும். வரும் 15-ஆம் தேதி முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் படி, மாத ஊதியம் பெறும் பெண்களுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருக்கும். மற்றவர்ளுக்கு 8.60 சதவிகிதமாக இருக்கும்.
வீடு கட்டுவதற்காக ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவிகிதமாக எஸ்பிஐ கடந்த மாதம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

