\
கடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு

கடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு

கடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு
Published on: 

கடன் வட்டி விகிதத்தை குறைத்து பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து அறிவித்துள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்பிஐ அறிக்கையின் படி தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com