கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்.பி.ஐ வங்கி

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்.பி.ஐ வங்கி
கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்.பி.ஐ வங்கி

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் எஸ்.பி.ஐ வங்கி 71 கோடி நிதியுதவி அளித்துள்ளது. 

இது குறித்து எஸ்.பி.ஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ கொரோனா 2வது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு உதவும் வகையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு எஸ்.பி.ஐ வங்கி 71 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 30 கோடி ரூபாய் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கபட்ட சில மாவட்டங்களில், 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும், 250 ஐசியூ வசதிகள் கொண்ட சிறப்பு படுக்கைகளை நிறுவவும், தனிமைப்படுத்தும் வசதிகள் கொண்ட 1000 படுக்கைகள் உருவாக்கவும் வழங்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் தினமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தங்களை உயிரை இழந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் மோடி உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடந்துவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 68 நபர்கள் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,417 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 2,18,959 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com