சாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..? சிறப்பம்சங்கள்..?

சாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..? சிறப்பம்சங்கள்..?

சாம்சங் கேலக்ஸி ‘ஏ21எஸ்’ ஸ்மார்ட்போன் : விலை..? சிறப்பம்சங்கள்..?

சாம்சங் கேலக்ஸியின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ21எஸ் மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின்னர் அனைத்து ஆன்லைன் நிறுவனங்களும், அனைத்து இடங்களுக்கும் செயல்படும் எனப்படுகிறது. அப்போது மிகப்பெரிய ஆஃபர்கள் அறிவிக்கப்படலாம் என்பதாலும், மக்கள் பல்வேறு புதிய பொருட்களை வாங்க நேரிடலாம் என்பதாலும் அனைத்து நிறுவனங்களும் புதிய ரகங்களைத் தயார் செய்துள்ளன. செல்போன் நிறுவனங்களும் பல புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்துள்ளன.

அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் மாடல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் மே மாதத்தின் இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி, இந்த போன் 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் எனவும், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு ரகங்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதற்கேற்ப விலையும் ரூ.16,200 மற்றும் ரூ.17,100 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம்.

பின்புறத்தில் 48 எம்பி, 8 எம்பி மற்றும் இரண்டு லென்சுகள் வழங்கப்பட்டிருக்கலாம். 13 எம்பியில் செல்ஃபி கேமரா இருப்பதாகத் தெரிகிறது. இந்த போனின் பேட்டரி 5000 எம்ஏஎச் திறன் கொண்டது எனப்படுகிறது. அத்துடன் 5ஜி நெட்வொர்க் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com