”ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆற்றல் இறக்குமதிக்கு தடை வித்தித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நகர்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக தான் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் தங்களது தேவையை சமாளிக்க இந்த தடையினால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏதும் இருக்காது என தெரிகிறது. இருந்தாலும் இந்த தடை எரிவாயு விலையை அந்நாட்டில் உயர்த்தும் என்றே சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக பன்னாட்டு நிறுவனமான ‘ஷெல்’ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.