அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 12 காசுகள் சரிந்து 82.05 ஆக உள்ளது.
India share market
India share marketகோப்புப்படம்

ஜூலை 21 இன்று ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து 82.05 ஆக இருந்துள்ளது. உள்நாட்டு பங்குகள் மற்றும் உறுதியான கச்சா எண்ணெய் விலைகள் முதலீட்டாளர்களை பாதித்தது என்று கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 81.93 ஆக இருந்தது. தொடர்ந்து வங்கிகளுக்கிடையேயான வெளிநாட்டு செலாவணியில், உள்நாட்டு பிரிவில் 82.03 இல் திறக்கப்பட்டது. பின்னர் அது 82.05 ஐ தொட்டது, கடைசியாக முடிவில் 12 பைசா சரிவை பதிவு செய்தது.

India share market
புதிய சாதனை உச்சத்தை எட்டிய இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகம்.. தொடருமா இந்த ஏற்றம்?

“வரவுகள் ஆதிக்கம் செலுத்துவதால், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமெரிக்க டாலரை 81.90க்கு அருகில் உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு, வரம்பிற்கு உட்பட்டதாகவே இருக்கும்” என்று Treasury தலைவர் மற்றும் ஃபின்ரெக்ஸ் Treasury ஆலோசகர்கள் LLP இன் நிர்வாக இயக்குநர் அனில் குமார் பன்சாலி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜூலை 26 அன்று நடைபெறும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம், அங்கு (U.S.) FED பேசும். தொடர்ந்து அதை பற்றிய தரவுகள் கூர்ந்து கவனிக்கப்படும்” என்று கூறினார்.

ஆறு கரன்சிகளின் பேஸ்கட்டுக்கு நிகரான கிரீன்பேக்கின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு, 0.09% சரிந்து 100.78 ஆக இருந்தது. உலகளாவிய எண்ணெய் அளவுகோல், ஒரு பீப்பாய்க்கு 0.78% உயர்ந்து $80.26 ஆக இருகின்றது.

உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்குகள் கொண்ட (பிஎஸ்இ) சென்செக்ஸ் 586.37 புள்ளிகள் அல்லது 0.87% குறைந்து 66,985.53 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. பரந்த (என்எஸ்இ) நிஃப்டி 160.25 புள்ளிகள் அல்லது 0.8% குறைந்து 19,818.90 ஆக இருந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) வியாழன் இன்று மூலதனச் சந்தைகளில் நிகர (Net) வாங்குபவர்களாக இருந்தனர். அவர்கள் ₹3,370.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

- ஜோஷ்வா.கா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com