நெருங்கும் ரம்ஜான்: ஆட்டுச்சந்தைகளில் ரூ.18 கோடிக்கு மேல் அமோக விற்பனை!

நெருங்கும் ரம்ஜான்: ஆட்டுச்சந்தைகளில் ரூ.18 கோடிக்கு மேல் அமோக விற்பனை!
நெருங்கும் ரம்ஜான்:  ஆட்டுச்சந்தைகளில் ரூ.18 கோடிக்கு மேல் அமோக விற்பனை!

ரம்ஜானையொட்டி செஞ்சி, வேப்பூரில் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 8 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்ஜான் விழாவினை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளதால் இந்த வருட ரம்ஜானை உற்சாக தயாராகிவருகின்றார்கள் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள். ரம்ஜான் பண்டிகை நாளுக்கு நாள் நெருங்கு இந்நிலையில் இறைச்சி விற்பனையும் பல இடங்களில் உயர்ந்து வருகின்றது. அப்படி இன்று நடைப்பெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைப்பெற்றது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சந்தையாக செஞ்சி ஆட்டுசந்தை உள்ளது. அங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆடு, மாடு மற்றும் காய்கறி சந்தைகள் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, காய்கறி வகைகள் சந்தைக்கு கொண்டு வந்து விற்பது வழக்கம். இதில் புகழ் பெற்றது ஆட்டுசந்தை. அதிலும் செஞ்சி புகழ் பெற்ற ஆட்டு சந்தையில் வெள்ளாடு, செம்மரி ஆடு, குரும்பாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வருவது அதிகம். அப்படி விற்பனைக்கு வரும் ஆடுகளை வாங்குவதற்கு தேனி, திண்டுக்கல்,கம்பம், வேலுர், ஆம்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவது வாடிக்கை வாங்கி செல்வது வழக்கம்.

செஞ்சியை அடுத்து சேலம் ஒமலூர் மாட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்ஜானையொட்டி கிருஷ்ணகிரி, செஞ்சி, வேப்பூர் சந்தைகளில் 18 கோடிக்கு விற்பனையான ஆடுகள். இவற்றில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தபடுகிறது. அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து செல்வர். இந்த அமோக வியாபாரம், அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

செஞ்சி, வேப்பூர், கிருஷ்ணகிரிகளிலிருந்து திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர். சந்தையில் 9 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை 7,500 முதல் 17,000 to 20,000 வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 2,000 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்ப்பதாகவும் ரம்ஜான் பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 10,000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்தனர் மேலும் ஆடு வளர்ப்போர் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ரம்ஜான் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகளும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com