\
ஏறுமுகத்தில் ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது!

ஏறுமுகத்தில் ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது!

ஏறுமுகத்தில் ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது!
Published on

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து முப்பத்து ஏழாயிரத்து எழனூற்று அறுபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் கடந்த 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலையானது 37 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. அதனைத்தொடர்ந்து படிப்படியாக ஏறுமுகம் கண்டது.  அதன் படி கடந்த 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 37, 224 ரூபாய்க்கும், 16 ஆம் தேதி 37, 504 ரூபாக்கும், நேற்று 37, 664 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலையும் சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 37,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமிற்கு 5104 ரூபாய்க்கும், சவரனுக்கு 40,832 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 71 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு சவரன் வெள்ளியின் விலை 71,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com