உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு

உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்று 12-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மே மாத விநியோகத்திற்கான பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.13 டாலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை இந்த உயரத்தை தொடுவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே ரஷ்யா உற்பத்தி செய்யும் எரிபொருளில் 66% வாங்குவாரின்றி தேங்கிக்கிடக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் முறைப்படியான இறக்குமதி தடையை அறிவித்தால், சர்வதேச அளவில் எரிபொருள் சந்தையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் தொடர்ந்து தடைபடும் பட்சத்தில் இந்தாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 185 டாலர்களை தொடக்கூடும் என ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com