தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழை இலை விலை திடீரென உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வாழைத் தார் வெட்டிய பிறகு உபரியாக இலையை விற்று விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். கடந்த மாதம் வரத்து அதிகரிப்பால் 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதம் ஒரு கட்டு வாழை இலை 2 ஆயிரத்து 500லிருந்து 3ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.