\
பணவீக்கம், தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்

பணவீக்கம், தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்

பணவீக்கம், தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்
Published on: 

நாட்டில் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில்லறை விலைப் பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்ற மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3 புள்ளி 05 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் இது 2.99 சதவிகிதமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் சில்லறை விலைப் பணவீக்கம் 4 புள்ளி 87 ‌சதவிகிதமாக இருந்தது. இதற்கு காய்கறிகள், இறைச்சி, மீன்‌ உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் என்று முன்னதாகவே கணிக்‌கப்பட்ட நிலையில், சென்ற நிதிக்கொள்கையின்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்தது.

இதேபோல மத்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (Index of Industrial Production ) படி கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 3 புள்ளி 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 4 புள்ளி 9 சதவிகிதமாக இருந்தது. 

இதற்கு ஏப்ரல் மாதத்தில் எரிசக்தி உற்பத்தி மற்றும் சுரங்கத் துறை உற்பத்தி ஆகியவற்றில் காணப்பட்ட முன்னேற்றமே காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் உற்பத்தி தொழிற்சாலைகள் பிரிவிலுள்ள 23 தொழிற்சாலைகளில் 14 தொழிற்சாலைகள் கடந்தாண்டை காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக அணியும் ஆடை உற்பத்தி கடந்த ஆண்டைவிட 33.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.