நுகர்வோர் விலை பணவீக்கம் எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம், நாடு, கிராமம், நகரம் என மூன்று பிரிவுகளில் வெளியிடப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.88% ஆக இருந்ததாக அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக அதிகரித்ததே ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் என அரசின் புள்ளியியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் விலைவாசி உயரக் கூடும் என ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்த நிலையில் இப்புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.