தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ஒரு முக்கிய அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி வெளியிடும் 2023-24-ஆம் நிதியாண்டிற்கான தங்கப்பத்திரங்கள் விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களா நீங்கள்? ஆபரணமாகவோ நாணயமாகவோ வாங்கும்போது அதை பாதுகாப்பாக வைத்திருப்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போதும், விற்கும்போதும் செய்கூலி, சேதாரம் என பலவகை கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

இவையெல்லாம், வேண்டாம், அதேநேரம், தங்கத்தின் விலையேற்ற பலனை பெறவேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்பவர்களுக்காகத்தான் மத்திய அரசு அவ்வப்போது தங்கப்பத்திரங்களை விற்பனை செய்கிறது.

ரிசர்வ் வங்கி வெளியிடும் 2023-24-ஆம் நிதியாண்டிற்கான தங்கப்பத்திரங்கள் விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தங்கப்பத்திரங்களை இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை வாங்க முடியும். ஒரு கிராம் மதிப்பில் கணக்கிடப்படும் ஒரு தங்கப்பத்திரத்தின் விலை 5,923 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் தங்கப்பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆன்லைன் மூலம் தங்கப்பத்திரங்களை வாங்குபவர்களுக்கு ஒரு கிராம் மதிப்பிலான தங்கப்பத்திரம் 5,873 ரூபாய்க்கு கிடைக்கும். தங்கப்பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com