ரெப்போ
ரெப்போpt web

வீட்டுக்கடன் வாங்கி இருக்கீங்களா? அப்போ இந்த calculation உங்களுக்குத்தான்!

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது floating interest rate-ல் ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களுக்கு emi தொகையை குறைக்க உதவும்.
Published on

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்திருப்பதால் 6.5%லிருந்து 6.25%ஆக தற்போது இருக்கிறது. கடந்த 11 முறை நடந்த ரிசர்வ் வங்கியின் நாணயக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆண்டுகளில் ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டிருக்கிறது மற்றும் மாறாமல் அதே ரெப்போ ரேட் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. தற்போது குறைக்கப்பட்டு இருப்பதால் வங்கிகளில் கார், வீடு லோன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த வட்டி விகிதம் குறைப்பு அவர்கள் மாதம் கட்டவேண்டிய emi-ல் குறிப்பிட்ட தொகை குறைய வழிவகை செய்யும்.

ரிசர்வ் வங்கி,
ரிசர்வ் வங்கி, file image

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பது floating interest rate-ல் ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களுக்கு emi தொகையை குறைக்க உதவும். அதேபோல இனிமேல் வீட்டுக்கடன் வாங்குபவர்கள் floating interest rate-ல் வீட்டுக்கடன் வாங்கும்போது அவர்களின் கடன் சுமை குறையும். எப்படி கடனில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

ரெப்போ
டெல்லியில் தொடர்ந்து பூஜ்ஜியத்தில் காங்கிரஸ்... என்ன காரணம்?

50 லட்சத்திற்கான வீட்டு லோன் 9% வட்டியில் ஒருவர் எடுத்து இருக்கிறார். அவர் 20 ஆண்டுகள் அதாவது 240 மாதங்கள் கடன் தவணையை செலுத்தவேண்டும் என வைத்துக்கொள்வோம். அந்த வகையில் அவர் தோராயமாக மாதம் EMI Rs 44,986 கட்டவேண்டி இருக்கும். கடன் காலத்தில் மொத்தமாக ரூ.58 லட்சம் கட்டவேண்டி இருக்கும்.தற்போது ரெப்போ வட்டி குறைப்பு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதங்களில் நேரடியாகக் குறைக்கப்படும்.

home loan
home loanfile image

இந்த சூழ்நிலையில், 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டால், உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாகக் குறையும். இதன் விளைவாக, உங்களின் மொத்த வட்டிச் செலுத்துதல் தோராயமாக ரூ.53.6 லட்சமாகக் குறையும். எனவே ரூ.4.4 லட்சம் சேமிப்பாக மாறும். கூடுதலாக, உங்கள் கடன் காலம் 230 மாதங்களாகக் குறைக்கப்படும். இதன் மூலம் உங்கள் கடனை 10 மாதங்களுக்கு முன்பே திருப்பிச் செலுத்த முடியும்.

ரெப்போ
”முகமது சிராஜை விட ஹர்சித் ரானா சிறந்த பந்துவீச்சாளர்..” - பார்த்தீவ் படேல்

அதே போல மற்றொரு சூழ்நிலையில், 8.85 சதவீத வட்டி விகிதம் மற்றும் 25 ஆண்டு கால தவணையில் ஒருவர் ரூ.50-லட்சம் கடனுக்கான கடன் வாங்கியிருக்கார் என வைத்துக்கொள்வோம். இந்த 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு கடன் வாங்கியவர் EMI தொகையை (ரூ. 41,447) குறைக்க வேண்டாம் என்று கருதினால், emi கட்டவேண்டிய தவணையை 27 மாத காலமாக குறைக்கலாம். இதனால் அவரது வட்டி ரூ.11.15 லட்சம் குறையும். இவ்வாறுதான் ரெப்போ ரேட் குறைப்பு வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் நேரடியாக சென்று விவரங்களை விசாரித்து கொள்ளலாம்.

ரெப்போ
துண்டான இளைஞரின் கையை இணைத்து சாதனை படைத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com