காப்பீடு பிரிமியம் மீதான வரியை நீக்க கோரிக்கை

காப்பீடு பிரிமியம் மீதான வரியை நீக்க கோரிக்கை

காப்பீடு பிரிமியம் மீதான வரியை நீக்க கோரிக்கை
Published on

காப்பீடு பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை விலக்கி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி 22 லட்சம் கையெழுத்து பிரதிகள் காப்பீடு கழக ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தென்மண்டல அளவில் கரூர் முதல் காரைக்கால் வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் ,வணிகர்கள் என பலரும் பங்குபெற்றனர். காப்பீடு பிரிமியம் மீதான வரி பொதுமக்களையும், எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சியையும் பாதிப்பதால் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கையெழுத்து பிரதிகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com